சந்திரன் : சந்திரன் நவகிரகங்களுள் இரண்டாம் இடத்தை வகிக்கும் கிரகம் ஆகும் . நவ கிரகங்களில் சூரியன் தந்தை என்றால் சந்திரன் தாய் ஆகும் . தந்தையின் கோபத்தைத் தனித்து ஒரு தாய் எப்படி தன் குழந்தைகளை அவர் கோபத்தில் இருந்து காக்கிறாளோ அது போல சூரியனின் வெப்பத்தை ஈர்த்து அதனைக் குளுமையாக்கி நமக்கு அளிப்பது சந்திரன் ஆகும் . எனவே தான் சந்திரனை தாய் என்று கூறுகிறோம் . திங்கள் மதி , சோமன் , என சந்திரனுக்கு வேறு பெயர்கள் உண்டு . பிறையும் சந்திரனும் : சந்திரனுக்கு வளர்பிறை , தேய்பிறை என இரண்டு காலங்கள் உண்டு . அதற்குப் பின்னணியில் ஒரு புராதன கதையும் உண்டு என்பதை நம்மில் பலரும் அறிவோம் . ஒரு முறை தட்சன் தனது 27 மகள்களையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான் . தனது 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதற்குப் பதிலாக ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் காட்டினான் சந்திரன் . இதனால் மனமுடைந்த மற்ற 26 மனைவிகளும் தந்தை தட்சனிடம் முறையிட்டனர் . தட்சன் சந்திரனிடம் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டினார் . சந்திரன் அதை ஏற்கவில்லை . இதனால் கோபமுற்ற தட்சன் சந்திரனின் அழக...