Skip to main content

பஞ்சங்கம் வாசிப்பது எப்படி

பஞ்சாங்கத்தின் முதல் கிடை மட்ட வரிசை 

வருடத்தின் பெயர் – தமிழ் வருடங்கள் மொத்தம் 60. நடப்பு வருடத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழ் மாதத்தின் பெயர் – தமிழ் மாதங்கள் பன்னிரண்டு. நடப்பு மாதத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். 

 கலியுக வருடம் – கலியுக வருடம் தோன்றிய நாள் முதல் இது கணக்கிடப்பட்டு வருகிறது. நாம் அனுஷ்டித்து வரும் வருடங்களுள் இது மிகவும் தொன்மையான வருடம் ஆகும். 

 சாலிவாகன வருடம் – இந்த வருடமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஆரம்பமாகும். நடப்பு வருடம் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். 

 ஆங்கில ஆண்டு – ஆங்கில ஆண்டு மொத்தம் 12 பன்னிரண்டு மாதங்களைக் கொண்டது. இது ஜனவரி முதல் ஆரம்பம் ஆகும். நடப்புவருடம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஹிசாரி ஆண்டு. இது இஸ்லாமியர் ஆண்டாகும். முகம்மது மெக்காவில் இருந்து மெதினாவிற்குச் சென்ற நாள் முதல் இந்த ஆண்டு கணக்கிடப்படுகிறது. 

 பசலி ஆண்டு : இது வட இந்தியாவில்அனுஷ்டிக்கப்படும் ஆண்டு. கொல்லம் ஆண்டு. – கேரளாவில் அனுஷ்டிக்கப்படும் ஆண்டு. ஆவணி மாதம் 1 ஆம் தேதி முதல் கொல்லம் ஆண்டு கணக்கிடப்படுகிறது. 

 தெலுங்கு வருடம் – பங்குனி மாதத்தில் வருகின்ற அமாவாசைக்கு மறுநாள் இந்த வருடம் ஆரம்பம் ஆகின்றது. 

 அயனம் – சூரியன் பயணிக்கும் திசையைக் குறிக்கும். ஆறு மாதம் ஒரு அயனம் வீதம் இரண்டு அயணங்கள் . உத்தராயணம் மற்றும் தட்சினாயணம் . ருதுவின் பெயர் – ருதுக்கள் மொத்தம் 6 சித்திரை-வைகாசி- வசந்த ருது ஆனி-ஆடி – கிரீஷ்ம ருது ஆவணி -புரட்டாசி- வருஷ ருது ஐப்பசி – கார்த்திகை- சரத் ருது மார்கழி – தை-ஹேமந்த ருது மாசி- பங்குனி= சிசிர ருது சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயர்- சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும். நடப்பு மாதத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இவை அனைத்தும் ஒரே வரியில் அமைந்திருக்கும்.  

இரண்டாவது கிடை மட்ட வரிசை

இவற்றின் கீழ் குறிப்பட்ட மாதம் முழுவதற்கான பஞ்சாங்க விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தந்த தலைப்பின் அந்த தேதிக்கான வரியில் அன்றைய விவரங்களை நாம் அறியலாம். கிடைமட்ட வரிசையின் தலைப்பின் கீழ் அந்தந்த நெடுவரிசைகளுக்கான விவரங்கள் உள்ளன, தமிழ் தேதி, ஆங்கில தேதி, மற்றும் அன்றைய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் போன்ற பஞ்சாங்கத்தின் முக்கிய பஞ்ச அங்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

 அடுத்து நட்சத்திர தியாஜ்யம் – தியாஜ்யம் என்றால் விலக்கப்ட வேண்டிய நேரம் ஆகும். நாம் நேரத்தை நிமிடம் நொடி என்று கணக்கிடுவது போல பஞ்சாங்க நேரம் நாழிகை- வினாழிகை என்று குறிப்பிடப்படும். இந்த நேரத்த்தில் சுப காரியங்கள் விலக்கப்பட வேண்டும். 

 அடுத்து நேத்திரம் – ஜீவன் -ஒரு குறிப்பிட்ட நாள் பலமாக இருக்கிறதா இல்லையா என்பதை அறிய உதவுகிறது. அமிர்தாதி யோகங்கள் – சுப காரியங்கள் நடத்துவதற்கு நாள் குறிக்கும் போது இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். ராசி இருப்பு: ஒரு குறிப்பிட்ட மாதத்தில் சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசியின் பரிமாண இருப்பு. குழந்தை பிறந்த நேரத்திற்கான லக்னம் கணிக்க பயன்படுகிறது. 

 அகஸ் : பகல் பொழுதின் அளவைக் குறிக்கும். சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை உள்ள கால அளவே அகஸ் ஆகும். விவாகச் சக்கரம்: சூரியன் மற்றும் சந்திரன் சென்று கொண்டு இருக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும். வார சூலை : ஒவ்வொரு கிழமையிலும் அந்தக் கிழமைக்குண்டான கிரகத்தின் ஆதிக்கம் இருக்கும். 

 கிரகம் கோவில்களில் எந்த திசையை நோக்கி இருக்கிறதோ அந்த திசைக்கு எதிர்த்சை சூலதிசை ஆகும். யோகினி : திதியின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. பிரயாணம் செய்யும் போது கவனிக்கப்பட வேண்டியது. சிரார்த்த திதி : சிரார்த்தம் செய்யும் திதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். 
 
விரதாதி முக்கிய விசேஷங்கள் : ஒரு தமிழ் மாதத்தில் வரும் விசேஷ நாட்கள், கரி நாட்கள், தனிய நாள், வாஸ்து நாள் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். 

மேலும் அந்த மாதத்தில் எந்த ராசியில் எந்த கிரகங்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பதற்கான ராசிக் (கோட்சாரம்) கட்டமும் கொடுக்கப்பட்டிருக்கும். தமிழ் பஞ்சாங்கம் மூலம் நீங்கள் அன்றன்றைய வாரம், திதி, நட்சத்திரம், யோகம் மற்றும் கரணம் போன்றவற்றை அறியலாம்.

Comments

Popular posts from this blog

July Matha Rasi Palan 2020 Tamil

மேஷம் ஜூன் மாத ராசி பலன் 2020 - June Month (matha) Mesham Rasi Palan in Tamil 2020 ரிஷபம் ஜூன் மாத ராசி பலன் 2020 - June Month (matha) Rishabam Rasi Palan in Tamil 2020 மிதுனம் ஜூன் மாத ராசி பலன் 2020 - June Month (matha) Mithuna Rasi Palan in Tamil 2020 சிம்மம் ஜூன் மாத ராசி பலன் 2020 - June Month (matha) Simha Rasi Palan in Tamil 2020 கன்னி ஜூன் மாத ராசி பலன் 2020 - June Month (matha) Kanni Rasi Palan in Tamil 2020 கடகம் ஜூன் மாத ராசி பலன் 2020 - June Month (matha) Kadagam Rasi Palan in Tamil 2020 துலாம் ஜூன் மாத ராசி பலன் 2020 - June Month (matha) Thulam Rasi Palan in Tamil 2020 விருச்சிகம் ஜூன் மாத ராசி பலன் 2020 - June Month (matha) Vrishikam Rasi Palan in Tamil 2020 தனுசு ஜூன் மாத ராசி பலன் 2020 - June Month (matha) Dhanusu Rasi Palan in Tamil 2020 மகரம் ஜூன் மாத ராசி பலன் 2020 - June Month (matha) Makaram Rasi Palan in Tamil 2020 கும்பம் ஜூன் மாத ராசி பலன் 2020 - June Month (matha) Kumbam Rasi Palan in Tamil 2020 மீனம் ஜூன் மாத ராசி பலன் 2020 -...

July Matha Rasi Palan in Tamil 2020

மேஷம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Mesham Rasi Palan in Tamil 2020 ரிஷபம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Rishabam Rasi Palan in Tamil 2020 மிதுனம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Mithuna Rasi Palan in Tamil 2020 கடகம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Kadagam Rasi Palan in Tamil 2020 சிம்மம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Simha Rasi Palan in Tamil 2020 கன்னி ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Kanni Rasi Palan in Tamil 2020 துலாம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Thulam Rasi Palan in Tamil 2020 விருச்சிகம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Vrishikam Rasi Palan in Tamil 2020 தனுசு ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Dhanusu Rasi Palan in Tamil 2020 மகரம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Makaram Rasi Palan in Tamil 2020 கும்பம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Kumbam Rasi Palan in Tamil 2020 மீனம் ஜூலை மாத ராசி பலன் 2020 - J...