Skip to main content

விருச்சிகம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2020 - 2021

 உங்கள் ராசிக்கு 3 ஆம் வீட்டில் அமர்கின்ற குரு பகவானின் பார்வை, 7 ஆம், 9 ஆம், 11 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 7 ஆம் வீடு என்பது தொழில், திருமணம், சமுதாய உறவுகள் ஆகியவற்றையும், 9 ஆம் வீடு என்பது அதிர்ஷ்டம், உயர் கல்வி, தந்தை, வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றையும், 11 ஆம் வீடு பதவி உயர்வு, விருப்பங்கள் நிறைவேறுதல், தன லாபம் ஆகியவற்றையும் குறிக்கிறது.

விருச்சிகராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி சுமாரான பலன்களையே தருகிறது. பேச்சில் மிக மிக கவனம் தேவை. உடன் பிறந்தவர்களுடன் சுமூகமான உறவை பேண வேண்டிய தருணம்.  ஏதாவது அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்திருந்தால் முன்னுரிமை கொடுத்து அதை நிறைவேற்றுங்கள். உங்களது கர்மாவை வலுப்படுத்தும் காலமிது. இது உங்கள் எதிர்காலத்திற்கு சிறந்தது. உங்களது அறிவுரை உங்கள் நலம் விரும்பிகளிடையே ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தலாம். சிறு பயணங்கள் நன்மை தரும்.

குடும்பத்தில் பொறுப்புடன் வழிநடத்துவீர்கள். அதிர்ஷ்டத்தினால் நன்மைகள் வந்து சேரும். அறிவுப்பூர்வமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களும் உங்களை புரிந்து கொள்வார்கள். அவர்களது முழு ஆதரவு கிட்டும். தேவையற்ற விவாதங்களையும்பேச்சுக்களையும் தவிர்ப்பது நல்லது.

பணியாற்றுபவராக இருந்தாலும், தொழில்முனைவோராக இருந்தாலும் உங்களுக்கு சவால்கள் காத்திருக்கின்றன. அதை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். நோய், நொடிகள் காரணமாக சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். உடல் சோர்வு, வயிற்று வலி, முதுகு வலி போன்ற உபாதைகள் ஏற்படலாம். மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.


வேலை, தொழில்

திறமையாக பணியாற்ற வேண்டிய காலமிது. சக பணியாளர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் யதார்த்த நிலையை புரிந்து கொள்வது நலம். மேலாதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் பணியாற்ற வேண்டிய சூழல் இது. உத்தியோகத்தில் கவனம் தேவை. தொழில் செய்வோர் தங்களது இலக்குகளை எட்டலாம். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுணர்வோடு இருங்கள். பணிகளை முழுவதுமாக நம்பி ஒப்படைக்காமல் நீங்கள் கண்காணிப்பது நல்லது. தொழில் தொடர்பான பயணங்களுக்கும், மாற்றங்களுக்கும் தயாராகுங்கள். விடா முயற்சி வெற்றியைத் தேடித் தரும்.

நிதி

பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஊக வணிகத்தின் வாயிலாக லாபங்களைப் பெறலாம். வீடு வாங்கல், விற்றல் மூலமும் ஆதாயங்கள் கிட்டும். நீண்ட கால புதிய முதலீடுகளால் நன்மையுண்டு. எதிர்பார்ப்புகள் இன்றி உடன் பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். பதவி உயர்வும், ஊதிய உயர்வும்  தேடி வரும் காலமிது.

குடும்பம்

குடும்பத்தில் சுமூகமான சூழல் நிலவும். அவர்களது விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். தாய் வழி உறவுகளின் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கலாம். மற்றவர்கள் தவறுகளை மன்னித்து சுமூகமாக பழகுவது சிறப்பு தரும். உங்கள் குழந்தைகளுக்கு அவர்களது வேலையில் ஏற்படும் முன்னேற்றத்தினால் மனநிறைவு கிடைக்கும். உங்களது ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதல் அவர்களை முன்னேற்றம் காணச் செய்யும்.

கல்வி

மாணவர்களுக்கு இது சவாலான காலம். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்கும் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். விடா முயற்சியினால் கல்வியை வெற்றிகரமாக முடித்து நல்ல வேலையில் அமர்வதற்கு உதவும். துணிச்சலான அணுகுமுறைகளால் கவலைகளை விரட்டுவீர்கள். தியானம் மற்றும் யோகா பயிற்சியின் வாயிலாக ஆற்றலையும், மன அமைதியையும் பெறலாம்.

காதலும், திருமண வாழ்க்கையும்

காதலர்களுக்கு பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டு அன்னியோன்யம் அதிகரிக்கும். உங்கள் துணைவரின் குடும்பத்தில் ஆதரவளிப்பீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். இது உங்கள் வாழ்க்கைக்கு நல்ல துவக்கத்தைத் தரும். கணவன் மனைவியிடையே சுமூகமான உறவு ஏற்படும். குடும்ப நல்லிணக்கம் ஏற்படும்.

ஆரோக்கியம்

தற்போது சந்தித்து வரும் ஆரோக்கிய குறைபாடுகளிலிருந்து விடுபட இது சரியான காலம்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு நோய்களை தீர்க்க முடியும். இயற்கை உணவை உட்கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் விளைவாக மன அமைதியின்மை ஏற்பட்டு ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம். உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

எளிய பரிகாரங்கள்

  • குரு காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள்.
  • தட்சிணாமூர்த்தி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள்.
  • பெற்றவர்களின் ஆசீர்வாதங்களை பெறுங்கள்.
  • பசு மாட்டிற்கு புல் அளியுங்கள். 

Comments

  1. Our Famous Indian Astrologer in New York Pandit Rudra ji is offering assistance and escorts to some of the renowned personalities of New York, USA. Our Top Indian Astrologer in New York pandit rudra ji has worked out fully fledged services interface for refined astrology services in New York. Already hailed as the Best Indian Astrologer in New York and all over the USA. He is one of the Very Best Astrologer in New York and currently offering a whole range of consultancy to help out the seekers.


    Famous Indian Astrologer in New York

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Mesham Rasi Palan Today திங்கள், 22 அக்டோபர், 2018

மேஷம் பொதுப்பலன்கள்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாகும். இது உங்களுக்கு சுமையாக இருக்கும். மேஷம் வேலை / தொழில்: இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே உங்கள் பணிகளை திட்டமிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் பணிகள் பாதியில் நிற்கும். Read more : http://www.hindufestivalsonline.com/lucky-color-number-and-stone-for-aries-sign/ மேஷம் காதல் / திருமணம்: உங்கள் அகந்தைப் போக்கை தவிர்ப்பது நல்லது. அதன் மூலம் உங்கள் துணையை மகிழ்விக்கலாம். அனுசரித்துப் போவதன் மூலம் மகிழ்ச்சி நிலவும். மேஷம் பணம் / நிதிநிலைமை: இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. அதிக பொறுப்புகளை எற்றுக் கொள்வது பற்றி கவலைப்படுவீர்கள். மேஷம் ஆரோக்கியம்: பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தூக்கமின்மைபாதிப்பும் ஏறபட வாய்ப்புள்ளது. Read more on : https://www.astroved.com/tamil/rasi-palan/mesham/

July Matha Rasi Palan in Tamil 2020

மேஷம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Mesham Rasi Palan in Tamil 2020 ரிஷபம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Rishabam Rasi Palan in Tamil 2020 மிதுனம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Mithuna Rasi Palan in Tamil 2020 கடகம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Kadagam Rasi Palan in Tamil 2020 சிம்மம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Simha Rasi Palan in Tamil 2020 கன்னி ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Kanni Rasi Palan in Tamil 2020 துலாம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Thulam Rasi Palan in Tamil 2020 விருச்சிகம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Vrishikam Rasi Palan in Tamil 2020 தனுசு ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Dhanusu Rasi Palan in Tamil 2020 மகரம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Makaram Rasi Palan in Tamil 2020 கும்பம் ஜூலை மாத ராசி பலன் 2020 - July Month (matha) Kumbam Rasi Palan in Tamil 2020 மீனம் ஜூலை மாத ராசி பலன் 2020 - J...