Skip to main content

Posts

Showing posts from July, 2021

Nakshatra Adhipathi List in Tamil - நட்சத்திர அதிபதிகள்

 ஜோதிட சாஸ்திரம் விண்வெளியில் ஒளிர்விடும் நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவை, பண்டைய காலத்திலிருந்தே, மனிதனை ஈர்த்து வந்துள்ளன. அவனுடைய ஆவலையும் தூண்டி வந்துள்ளன. இவற்றைப் பலகாலம் கண்டு மகிழ்ந்த அவன், பின்னர், இவற்றின் அமைப்பு, இயக்கம் போன்றவற்றை கவனிக்கத் தொடங்கினான். தவறாமல், தொடர்ந்து இவற்றைக் கூர்ந்து நோக்கி வந்த அவன், பின்னர், இவற்றுடன், மண்ணுலகில் மனிதன் வாழும் வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கத் தொடங்கினான். பல்லாண்டு காலம் தொடர்ந்த இந்த விடா முயற்சியின் பயனாக, இது போன்ற விண்வெளி வாசிகள், மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதைக் கண்டு கொண்டான். இது போன்ற நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவற்றின் அமைப்பு, இயக்கம் ஆகியவை குறித்து முழுமையாகக் கற்று, அறிந்து கொள்வதன் முலம், மனிதர்களின் வாழ்க்கை, எதிர்காலம் ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் என்பதையும் அறிந்து கொண்டான்.  பல்லாண்டுகால, இந்த அநுபவ அறிவின் விளைவாக உருவானது தான் ஜோதிடம் எனப்படும் பண்டைய விஞ்ஞானம் அல்லது சாஸ்திரம் ஆகும்.  ஜாதகம் கடல் போல் விரிந்து, பரந்துள்ள இந்த ஜோதிடக் கலை, குறிப்பாக, நட்சத்திரம், கிரகம் ஆ...

சந்திர தோஷ பரிகாரத் தலம் திங்களூர்

  சந்திரன் : சந்திரன் நவகிரகங்களுள் இரண்டாம் இடத்தை வகிக்கும் கிரகம் ஆகும் . நவ கிரகங்களில் சூரியன் தந்தை என்றால் சந்திரன் தாய் ஆகும் . தந்தையின் கோபத்தைத் தனித்து ஒரு தாய் எப்படி தன் குழந்தைகளை அவர் கோபத்தில் இருந்து காக்கிறாளோ அது போல சூரியனின் வெப்பத்தை ஈர்த்து அதனைக் குளுமையாக்கி நமக்கு அளிப்பது சந்திரன் ஆகும் . எனவே தான் சந்திரனை தாய் என்று கூறுகிறோம் . திங்கள் மதி ,   சோமன் , என சந்திரனுக்கு வேறு பெயர்கள் உண்டு .   பிறையும் சந்திரனும் : சந்திரனுக்கு வளர்பிறை , தேய்பிறை என இரண்டு காலங்கள் உண்டு . அதற்குப் பின்னணியில் ஒரு   புராதன கதையும் உண்டு என்பதை நம்மில்   பலரும் அறிவோம் . ஒரு முறை தட்சன் தனது 27 மகள்களையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான் . தனது 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதற்குப் பதிலாக ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் காட்டினான் சந்திரன் . இதனால் மனமுடைந்த மற்ற 26 மனைவிகளும் தந்தை தட்சனிடம் முறையிட்டனர் . தட்சன் சந்திரனிடம் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டினார் . சந்திரன் அதை ஏற்கவில்லை . இதனால் கோபமுற்ற தட்சன் சந்திரனின் அழக...

பஞ்சங்கம் வாசிப்பது எப்படி

பஞ்சாங்கத்தின் முதல் கிடை மட்ட வரிசை   வருடத்தின் பெயர் – தமிழ் வருடங்கள் மொத்தம் 60. நடப்பு வருடத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழ் மாதத்தின் பெயர் – தமிழ் மாதங்கள் பன்னிரண்டு. நடப்பு மாதத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.   கலியுக வருடம் – கலியுக வருடம் தோன்றிய நாள் முதல் இது கணக்கிடப்பட்டு வருகிறது. நாம் அனுஷ்டித்து வரும் வருடங்களுள் இது மிகவும் தொன்மையான வருடம் ஆகும்.   சாலிவாகன வருடம் – இந்த வருடமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஆரம்பமாகும். நடப்பு வருடம் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.   ஆங்கில ஆண்டு – ஆங்கில ஆண்டு மொத்தம் 12 பன்னிரண்டு மாதங்களைக் கொண்டது. இது ஜனவரி முதல் ஆரம்பம் ஆகும். நடப்புவருடம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஹிசாரி ஆண்டு. இது இஸ்லாமியர் ஆண்டாகும். முகம்மது மெக்காவில் இருந்து மெதினாவிற்குச் சென்ற நாள் முதல் இந்த ஆண்டு கணக்கிடப்படுகிறது.   பசலி ஆண்டு : இது வட இந்தியாவில்அனுஷ்டிக்கப்படும் ஆண்டு. கொல்லம் ஆண்டு. – கேரளாவில் அனுஷ்டிக்கப்படும் ஆண்டு. ஆவணி மாதம் 1 ஆம் தேதி முதல் கொல்லம் ஆண்டு...